top of page

கேரளத்து சிவப்பரிசிப் புட்டு

Prep Time:

Cook Time:

Serves:

Level:

About the Recipe

Ingredients

  • நெய்தல் பூங்கார் பச்சரிசி புட்டு மாவு (வறுத்தது): 1 கப்

  • துருவிய தேங்காய்: 1/2 கப்

  • உப்பு: தேவையான அளவு

  • தண்ணீர்: மாவு பிசைய தேவையான அளவு (சுமார் 1/4 முதல் 1/2 கப் வரை)

Preparation

  1. மாவு தயாரித்தல்:

    • ஒரு அகன்ற பாத்திரத்தில் நெய்தல் புட்டு மாவை எடுத்துக்கொள்ளவும்.

    • ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீரை எடுத்து, அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

    • இப்போது உப்பு கலந்த தண்ணீரை மாவில் சிறிது சிறிதாக தெளித்து, விரல்களால் உதிரியாக பிசையவும். மாவில் கட்டிகள் விழாமல் பார்த்துக்கொள்ளவும்.

  2. சரியான பதம்: 

    • பிசைந்த மாவை கையில் எடுத்து அழுத்திப் பிடித்தால் கொழுக்கட்டை போல வடிவம் வர வேண்டும்,லேசாக தொட்டால் எளிதாக உதிர்ந்து விட வேண்டும். இதுவே புட்டுக்கு சரியான பதம்.

    • மாவை பிசைந்த பின் 5 முதல் 10 நிமிடங்கள் அப்படியே மூடி வைக்கவும்.

  3. புட்டு குழலில் நிரப்புதல்:

    • புட்டு குழலை (Puttu maker) எடுத்து, அதன் அடியில் உள்ள சில்லினை (அச்சு) வைக்கவும்.

    • முதலில் 1 அல்லது 2 தேக்கரண்டி துருவிய தேங்காயை அடியில் போடவும்.

    • அதன் மேல் பிசைந்து வைத்துள்ள புட்டு மாவை கைப்பிடி அளவு மெதுவாக சேர்க்கவும். (மாவை அழுத்தி நிரப்பக் கூடாது, உதிரியாகவே போட வேண்டும்).

    • மீண்டும் சிறிது தேங்காய், மீண்டும் மாவு என குழல் நிறையும் வரை மாற்றி மாற்றி நிரப்பவும்.

    • கடைசியாக மேல் அடுக்கில் துருவிய தேங்காயை வைத்து மூடியால் மூடவும்.

  4. வேகவைத்தல்:

    • புட்டு பானையில் (அல்லது பிரஷர் குக்கரில்) 2 கப் அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

    • தண்ணீர் கொதித்து ஆவி வரத் தொடங்கியதும், மாவு நிரப்பிய புட்டு குழலை பானையின் (அல்லது குக்கர் நாசிலின்) மீது சரியாக பொருத்தவும்.

    • மிதமான தீயில் 5 முதல் 8 நிமிடங்கள் வரை ஆவியில் வேகவைக்கவும்.

    • புட்டு குழலின் மேல் துளை வழியாக நறுமணத்துடன் நன்றாக ஆவி வந்ததும் அடுப்பை அணைத்து விடலாம்.

  5. தட்டில் எடுத்தல்:

    • புட்டு குழலின் பின்புறமாக ஒரு சிறிய குச்சி அல்லது கரண்டியின் காம்பைப் பயன்படுத்தி புட்டை மெதுவாகத் தள்ளி தட்டில் எடுக்கவும்.


எப்படி பரிமாறுவது?

சூடான புட்டுடன் கடலைக்கறி (Kadala Curry), நேந்திரம் பழம், அப்பளம் சேர்த்து சாப்பிடுவது மரபான முறையாகும். இனிப்பு விரும்புபவர்கள் நாட்டுச்சர்க்கரை மற்றும் நெய்தல் பசு நெய் சேர்த்தும் சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும்!

Neithal 2024

©
bottom of page